எங்க கட்சிக்கு மட்டும் ஓட்டு போடுங்க.. I.N.D.I.A கூட்டணி பற்றி அப்பறம் பார்த்துக்கலாம் : முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை..!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 4:21 pm

எங்க கட்சிக்கு மட்டும் ஓட்டு போடுங்க.. I.N.D.I.A கூட்டணி பற்றி அப்பறம் பார்த்துக்கலாம் : முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை..!!!

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு யாராலும் தீங்கு செய்ய முடியாது.
பா.ஜ.க எதிராக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும். இண்டியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.

மேற்குவங்கத்தில் எங்களை தவிர மற்றக்கட்சிகளுக்கு ஓட்டளிக்காதீர்கள். தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் ஓட்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர் பேசினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி