அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டால் ஊதியம் உயர்த்தப்படும் : மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan23 ஜனவரி 2023, 2:21 மணி
அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டால் ஊதியம் உயர்த்தப்படும் : மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!
அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டால் ஊதியம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.
இதன் காரணமாக அம்மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் வகையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதாவது, அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு முறை ஊதிய உயர்வும், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிக்கிம் மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை கணக்கில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.
0
0