தெருநாய்கள் துரத்தியதால் வேகமாக ஓடிய தொழிலதிபர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
23 October 2023, 9:57 pm

தெருநாய் துரத்தியதால் வேகமாக ஓடிச் சென்றதில் கீழே விழுந்த தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாஹா பக்ரி டீ குரூப் நிறுவனத்தின் உரிமையாளர் பரக் தேசாய் (49). இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.கடந்த 15ம் தேதி மாலை வழக்கம் போல, அகமதாபாத்தில் உள்ள தனது வீடு அருகே பரக் தேசாய் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த தெருநாய்கள் துரத்தியதால் பரக் தேசாய் வேகமாக ஓடியுள்ளார். அந்த சமயம் நிலைதடுமாறிய பரக் கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், பரக் தேசாய்க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர்கள், ஐசியூல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பெற்று வந்த பரக் தேசாய் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!