ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட காட்சிகள் அழிக்கப்பட்டதா? கெஜ்ரிவால் வீட்டில் சிசிடிவிகளை கைப்பற்றி விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 4:59 pm

ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால், கெஜ்ரிவாலை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கெஜ்ரிவாலை சந்திக்க விடாமல் தடுத்து, அவரது உதவியாளர் தன்னை தாக்கியதாக போன் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் இந்த விவகாரம் தொடர்பாக, பதிவான 2 வீடியோக்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.

முதல் வீடியோவில் சுவாதி மலிவாலுக்கும், பிபவ் குமாருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும், இரண்டாவது வீடியோவில் சுவாதி மலிவாலை, முதல்வர் வீட்டில் இருந்து பெண் பாதுகாவலர்கள் வாசல் வரை அழைத்துச் சென்று வெளியே விடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டிவிஆர்) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆனால், அதில் சுவாதி மாலிவால் தாக்கப்பட்டது தொடர்பாக எந்த வீடியோ காட்சியும் இல்லை. அந்த வீடியோ காட்சியை எடிட் அல்லது டெலிட் (அழித்து) செய்து இருக்கலாம் என டில்லி போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!