முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே பில்லி, சூனியம் நடத்தப்பட்டதா? தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சி..!(Video)

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 3:59 pm

முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே பில்லி, சூனியம் நடத்தப்பட்டதா? தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சி..!(Video)

முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே எலுமிச்சை, பொம்மை என பில்லி சூனியம் மாய மந்திரம் செய்ததற்கான தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்தி நகர் பகுதிபஞ்சாரா ஹில்ஸின் நந்தி நகர் பகுதியில் இன்று முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இல்லத்திற்குப் பக்கத்தில் உள்ள திறந்தவெளியில் சிலர் எலுமிச்சை பழங்கள் மற்றும் சூனியம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களைக் கண்டெடுத்ததால் பெரும் பீதி ஏற்பட்டது.

மேலும் படிக்க: ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவ இடத்தை புகைப்படம் எடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலர் முந்தைய நாள் இரவு சூனியம் செய்து பொருட்களை விட்டுச் சென்றிருக்கலாம் என்று வதந்தி பரவுகிறது. ஆனால் போலீசார் இதுவரை உறுதி செய்யவில்லை.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 811

    0

    0