உங்க மாநிலத்துக்கு உதவி செய்ய தயாரா இருக்கோம் : இமாச்சல பிரதேச முதலமைச்சருக்கு பிரதமர் மோடி ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 7:41 pm

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றார் இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர்சிங் சுக்கு-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பொறுப்பற்றுள்ள ஸ்ரீ சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி