பாரதியின் கனவுகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம் : பிரதமர் மோடி ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 12:55 pm

பாரதியாரின் கனவுகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அன்னாரை நான் வணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக ‘மகாகவி பாரதியார்’ விளங்கினார்.

இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?