வயநாடு தொகுதியே வேண்டாம்.. சட்டென முடிவை மாற்றிய ராகுல் காந்தி : அந்த தொகுதிக்க குறி?!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2023, 6:11 pm

வயநாடு தொகுதியே வேண்டாம்.. சட்டென முடிவை மாற்றிய ராகுல் காந்தி : அந்த தொகுதிக்க குறி?!!!

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தனது பெருமையை மீட்டெடுக்கும் என்று உபி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் நம்பிக்கை தெரிவித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் எம்.பி ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என்றும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தனது பெருமையை மீட்டெடுக்கும் என உத்தரபிரதேசத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயமாக போட்டியிடுவார். வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி விருப்பம் தெரிவித்தால், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும், தீவிரமாக உழைத்து அவரை வெற்றி பெறச் செய்வோம் என காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருக்கிறார்.

இந்நிலையில் அடுத்த தேர்தலில் அவர் மீண்டும் அமெதி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு அமெதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ராகுல் காந்தியின் சொந்த தொகுதியாக பார்க்கப்படும் அமேதியில், பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

ஆனால், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று தனது எம்.பி பதவியை தக்கவைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?
  • Close menu