வாங்க வாங்க.. WELCOME : திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலை வரவேற்ற முக்கிய குற்றவாளி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2024, 7:17 pm

வாங்க வாங்க.. WELCOME : திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலை வரவேற்ற முக்கிய குற்றவாளி..!!!

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை அமலாக்கத்துறை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை என்றால், டெல்லி திஹார் ஜெயலில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், திஹார் ஜெயிலுக்கு வரவேற்கிறேன் என சுகேஷ் சந்திரசேகர் கெஜ்ரிவாலுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சுகேஷ் சந்திரசேகர் கூறுகையில் “உண்மை வென்றுள்ளது. திஹார் ஜெயிலுக்கு நான் அவரை வரவேற்கிறேன். கெஜ்ரிவால் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவேன். நான் அரசு தரப்பு சாட்சியாகுவேன் (approver). அவரை விசாரணைக்கு கொண்டு வருவதை உறுதி செய்வேன். அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகராவின் மகள் கே. கவிதாவுக்கும் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் “போலி வழக்குள் என்ற நாடகம் மற்றும் குற்றச்சாட்டு பொய்த்துவிட்டன. உண்மை வென்றுள்ளது. உங்களுடைய கர்மா மீண்டும் உங்களுக்கு வந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!