இரு பெண்களை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற பெண்கள்… மேற்கு வங்கத்தில் மீண்டும் மீண்டும் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 6:55 pm

மேற்கு வங்கத்தில் இருபெண்களை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

கடந்த 18ம் தேதி பெண் ஒருவர் தனது உறவினருடன் எலுமிச்சை பழங்களை விற்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த இனிப்புக் கடைக்காரர் ஒருவர், இவர்கள் இருவர் மீதும் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இவர்களின் ஆடைகளை களைந்து அங்கிருந்தவர்களும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் மால்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் மகன் கூறுகையில், அவர்களை திங்கட்கிழமை விடுதலை செய்வதாக கூறியிருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?