‘போனா போகுது-னு 2 சீட் யோசித்தேன்… இனி காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்’ ; I.N.D.I.A. கூட்டணியை உதறி தள்ளிய மம்தா!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 8:27 pm

மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ‘இண்டியா’யில் தற்போது விரிசல் ஏற்பட்டு, ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறி இண்டியா கூட்டணி கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.

இண்டியா கூட்டணியில் இருந்து மூவரும் வெளியேற காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மால்டாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை கொடுக்க நான் தயாராக இருந்தேன். அந்த 2 தொகுதியிலும் அவர்களை வெற்றி பெறச் செய்யவும் தயாராக இருந்தேன். ஆனால் அவர்கள் கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். இப்பொழுது சொல்கிறேன் அவர்களுக்கு ஒரு சீட்டு கூட நான் கொடுக்க மாட்டேன், எனக் கூறினார்.

மேலும், நாளைக்குள் மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் மத்திய அரசு வழங்கவில்லை எனில், பிப்ரவரி 2ம் தேதி முதல் தர்ணா நடத்துவேன், எனக் கூறினார்.

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?