காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது… I.N.D.I.A. கூட்டணிக்கு எதிராக இறங்கிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 9:03 am

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமுன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா எனும் கூட்டணியை உருவாக்கினர். இரண்டு அல்லது 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய போது, இண்டியா கூட்டணி சிதறத் தொடங்கியது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், இண்டியா கூட்டணி அதிர்ச்சிக்குள்ளாகியது.

மேலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூடுதல் தொகுதியை கேட்டதால் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கோபமடைந்தார். மேலும், காங்கிரசை கடுமையாக அவர் விமர்சித்து வந்துள்ளார். எனவே, காங்கிரஸ் மேற்குவங்கத்தில் தனித்து களமிறங்குவதாக அறிவித்தது.

இதையடுத்து, மம்தா பானர்ஜி நேரடியாகக் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி 300ல் 40 இடங்களில் வெல்லுமா என்றே எனக்குத் தெரியவில்லை. உங்களால் முடிந்தால் வாரணாசியில் பாஜகவைத் தோற்கடிக்கவும்.

முன்பு வென்ற இடங்களிலும் இந்த தேர்தலில் நீங்கள் தோற்றுப் போவீர்கள். எங்கள் கட்சி உத்தரப் பிரதேசத்தில் இல்லை, நீங்கள் தானே அங்கே இருப்பதாகச் சொல்கிறீர்கள். முடிந்தால் தோற்கடித்துக் காட்டுங்கள். நீங்கள் இந்த முறை ராஜஸ்தானில் கூட ஜெயிக்கவில்லை. போய் அந்த இடங்களை முதலில் வெல்லுங்கள். அலகாபாத்தில் போய் வெற்றி பெறுங்கள். நீங்கள் எவ்வளவு தைரியமான கட்சி என்று அப்போது பார்க்கலாம், எனக் கூறினார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?