‘தயவு செய்து கொஞ்சம் ஓய்வு எடுங்க பிரதமர் அவர்களே’ ; மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உருக்கம்!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 9:39 pm

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவை தொடர்ந்து பிரதமர் மோடியை ஓய்வெடுக்குமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு, குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திa பிறகு, தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.

அதன்பின், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்று ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Mamata 5 Lakhs - Updatenews360

அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார்தான். இந்த நேரத்தில் எனது தாயாரை நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும். தயவுசெய்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள், என கூறினார்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!