குண்டர்களின் அரசு: குண்டர்களுக்கான அரசு:இது எங்க டர்ன்:வறுத்தெடுத்த கவர்னர்…..!!

Author: Sudha
18 August 2024, 9:19 am

மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டை, அவர் மறுத்துவிட்டார். இதை அரசியலாக்க மம்தா கடும் முயற்சி செய்வதாக கண்டங்கள் எழுந்தது.கவர்னருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இது எங்க டர்ன் என்பது போல கோல்கட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அரசுக்கு கவர்னர் ஆனந்த போஸ் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் மேற்குவங்க மாநில அரசு குண்டர்களால், குண்டர்களுக்காக நடத்தப்படுகிறது. போக்கிரித்தனம் பரவலாக உள்ளது,” என அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாணவர்களிடையே அச்சமும், பாதுகாப்பின்மையும் நிலவுகிறது. பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு தவறிவிட்டது. மக்களின் உயிர், உடைமைகளை பாதுகாப்பது அரசின் கடமை. மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மருத்துவக் கல்லூரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை எங்கு நடந்தாலும் அதை தடுக்க தவறினால், முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!