மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அதிர்ச்சி… பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய மம்தா கட்சியினர்.. நாட்டை உலுக்கிய சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 6:53 pm

மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் இரு பழங்குடி பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும், இதேபோன்ற சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. கடந்த 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது, ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்சலா பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

Mamata 5 Lakhs - Updatenews360

திரிணாமூல் வேட்பாளர் இமந்தா ராய் உள்பட பலரது பெயர்களும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரிணாமூல் கட்சியினர் தனது ஆடைகளைக் கிழித்து, நிர்வாணமாக்கி, கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச்சென்றதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

இந்த சீரழிவுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, மேங்கு வங்காள மாநிலத்தில் பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது நடந்த பயங்கரம் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 477

    0

    0