‘உங்க குடியரசு தலைவர் எப்படி இருக்கிறார்-னு பாருங்க’ ; திரௌபதி முர்முவை உருவ கேலி செய்த மேற்குவங்க அமைச்சர்… மகளிர் ஆணையத்திற்கு பறந்த கடிதம்!

Author: Babu Lakshmanan
12 November 2022, 2:18 pm

மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் நடந்த பொதுக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் அகில் கிரி கலந்து கொண்டார்.

அப்போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராகவும், அவரை உருவ கேலி செய்யும் வகையிலும் அவர் பேசினார்.

அதாவது, “நான் அழகாக இல்லை என்று சுவேந்து அதிகாரி கூறுகிறார். இதை சொன்ன அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள். உங்கள் ராஷ்டிரபதி எப்படி இருக்கிறார்? நாங்கள் அவர்களின் தோற்றத்தை மதிப்பிடுவதில்லை. குடியரசு தலைவரின் நாற்காலியை மதிக்கிறோம்,” என்றார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அகில் கிரி கடும் கண்டனங்களை சந்தித்து வருகிறார். மேலும், பாஜகவினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை உருவ கேலி செய்ததாக, மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியை கைது செய்யக்கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு பாஜக எம்பி சௌமித்ரா கான் புகார் மனு அளித்துள்ளார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…