கனடா தூதரை வெளியேற்றும் இந்தியா.. கனடாவின் பதில் என்ன?

Author: Hariharasudhan
15 அக்டோபர் 2024, 12:52 மணி
modi
Quick Share

இந்தியாவில் உள்ள கனடா தூதர்களை் சொந்த நாட்டிற்குச் செல்ல மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

டெல்லி: ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே இருந்த அரசியல் சிக்கல் தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. காரணம், கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்பட மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா முடிவெடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், அக்டோபர் 19ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு கனடா தூதர் உள்ளிட்ட 6 பேர் வெளியேற வேண்டும் எனறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளை இந்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், கனடா அரசும் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, கனடாவை விட்டு வெளியேறும்படி 6 இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இதனால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சுமத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று முற்றிலும் மறுத்த இந்திய அரசு, இந்திய அதிகாரிகளை ஆதாரமின்றி அவமதிப்பதாக சாடியுள்ளது. மேலும், கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை கட்டுப்படுத்தத் தவறியதை, அந்நாட்டு அரசு நியாயப்படுத்த முயற்சி செய்வதாகவும் இந்தியா பதில் அளித்துள்ளது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இந்திய தூதரக அதிகாரிகள் மீது சந்தேகம் உண்டாக்கும் வகையிலான குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதால், இந்திய அரசு சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட தூதரக அதிகாரிகளை இந்தியாவுக்கு திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது பாதுகாப்புக்கு ஜஸ்டின் ட்ருடோ அரசின் நடவடிக்கைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் வெளியுறவுதுறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

சமீபத்தில் சஞ்சய் குமார் வர்மா படத்தை துப்பாக்கியால் சீக்கியர்கள் சுடுவது போன்ற படங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளை இந்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், கனடா அரசும் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • anna திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!
  • Views: - 55

    0

    0

    மறுமொழி இடவும்