முன்னாள் முதலமைச்சருக்கு என்னாச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி : பரபரக்கும் அரசியல் களம்!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2023, 10:02 pm
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது.
இதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார்.
இந்தநிலையில் உம்மன் சாண்டியை அவரது மனைவி, குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் காட்டு தீ போல் கேரளாவில் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அதை உம்மன் சாண்டி தற்போது மறுத்து உள்ளார். இது குறித்து உம்மன் சாண்டி மகன் பேஸ்புக் மூலம் கூறியதாவது, அப்பா காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தைக்கு சிறிதளவு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.