கவுதம் காம்பீர் போனால் என்ன.. பாஜக சார்பாக வேட்பாளராக களமிறங்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்?!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 4:54 pm

கவுதம் காம்பீர் போனால் என்ன.. பாஜக சார்பாக வேட்பாளராக களமிறங்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்?!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாஜகவில் இணைந்து, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக தான் யுவராஜ் சிங், அண்மையில் மாநில பாஜக தலைவர் சோம்தேவ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பான செய்திகளுக்கு தற்போது யுவராஜ் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று கூறி, வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பலதரப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது. எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன். எங்களின் சிறந்த திறன்களை ஒன்றாக வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்” என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!