கேசிஆர் பதவியை கூட ராஜினாமா செய்யல.. அதுக்குள்ள என்ன அவசரம்? தெலங்கானா டிஜிபி அதிரடி சஸ்பெண்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 8:02 pm

கேசிஆர் பதவியை கூட ராஜினாமா அதுக்குள்ள என்ன அவசரம்? தெலுங்கானா டிஜிபி அதிரடி சஸ்பெண்ட்!!

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் வெற்றி வாய்ப்புகள், அடுத்த ஆட்சி யாருடையது என்ற விவரங்கள் தெரியவந்து விட்டன.

காங்கிரஸ் கட்சி, தான் ஆட்சி புரிந்த சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை பாஜகவிடம் இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதனால் வடக்கே 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வி முகமாக மாறியுள்ளது. ஆனால், தெற்கே தெலுங்கானாவில் முதன் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தெலுங்கானாவில் 119 சட்டப்பேரவை தொகுதி முன்னிலை நிலவரப்படி 64 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 8 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் ஏறக்குறைய தெலுங்காளவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க போவது உறுதியானதை அடுத்து தெலுங்கானா டிஜிபி அஞ்சனிக்குமார் , காங்கிரஸ் தலைவரும் தெலுங்கானா அடுத்த முதல்வராக கருதப்படும் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகளானது இன்னும் நடைமுறையில் உள்ளது. இன்னும் தெலுங்காளவில் கேசிஆர் தான் முதல்வர். அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை.

ரேவந்த் ரெட்டி வெற்றி இன்னும் உறுதியாகவில்லை. அவர் தற்போது அரசியல் தலைவர் மட்டுமே. அதனால், ஓர் அரசியல் தலைவரை டிஜிபி எனும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி சந்தித்து வாழ்த்து கூறியது தேர்தல் விதிமுறை மீறல் என கூறி தெலுங்கானா டிஜிபி அஞ்சன்குமாரை தலைமை தேர்தல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?