உன்னோட ரேட் என்ன? கணவன் கண்முன்னே மனைவியை விலை பேசிய போதை ஆசாமி.. ஷாக் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 10:58 am

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், உனது ரேட் என்ன என்று கேட்டு , எங்க அப்பா, மாமா எல்லாமே டி.எஸ்.பி என்று கூறியுள்ளார்.

இதனால் பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். அதில், இதுதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் நீதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி