இதென்ன முகக்கவசமா? இல்ல தாடியா? நாடாளுமன்றத்தில் சுரேஷ் கோபியை கிண்டல் செய்த வெங்கையாநாயுடு!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2022, 4:28 pm

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பிள் உள்ளார். 63 வயதாகும் அவருக்கு பாஜக எம்பி பொறுப்பை அளித்துள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது சுரேஷ் கோபி சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை குறுக்கிட்ட துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா, இது என்ன முக கவசமா? தாடியாஈ என கேள்வி எழுப்பினார்.

வெங்கையா நாயுடு கேட்ட கேள்வி அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, சார் தனது அடுத்த படத்திற்கான கெட்அப் என விளக்கம் அளித்தார்.

COURTESY : SANSAD TV
  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…