வீடு, எருமை, தாலி.. என்ன பிரதமரே இப்படி விரக்தியில் பேசறீங்க : ராகுல் காந்தி ATTACK!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 1:47 pm

வீடு, எருமை, தாலி.. என்ன பிரதமரே இப்படி விரக்தியில் பேசறீங்க : ராகுல் காந்தி ATTACK!

மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்து அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டன.

ஏற்கனவே காங்கிரசின் தேர்தல் அறிக்கைகளை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் அறிவித்த , சாதிவாரி கணக்கெடுப்பு , அதற்கு பிறகான இடஒதுக்கீடு விகிதத்தில் மாற்றம், நில உச்சவரம்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை, பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறது.

பிரதமர் மோடி கூறுகையில், காங்கிரஸ் உங்கள் சொத்துக்களை பறிக்க பார்க்கிறது. நீங்கள் இரண்டு எருமை மாடுகள் வைத்து இருந்தால் அதில் ஒன்றை காங்கிரஸ் பறித்து கொள்ளும் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரசுக்கு எதிரான பிரதமர் மோடியின் விமர்சனங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தை மறந்துவிட்டார்.

மேலும் படிக்க: மாடியில் இருந்து திடீரென குதித்து கல்லூரி மாணவி தற்கொலை… கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

உங்கள் வீட்டை காங்கிரஸ் பறித்துவிடும். பெண்களிடம் உள்ள தாலியை காங்கிரஸ் பறித்துவிடும். காங்கிரஸ் உங்கள் எருமைகளை பறித்துவிடும் என கூறி வருகிறார்.

உண்மையில் பாஜகவிடம் இருந்து 300இல் 150-க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் பறித்து ஆட்சி அமைக்க்கும் என்பதால் நரேந்திர மோடி இதுபோன்ற தவறான, பொய்யான விஷயங்களை தொடர்ந்து கூறி வருகிறார். தோல்வி பயத்தில் பிரதமர் என்ற கண்ணியத்தை மறந்து, ‘பொய்களின் இயந்திரமாக’ மோடி மாறிவிட்டார்.

I.N.D.I.A அரசு பொதுமக்களிடம் இருந்து எதையும் எடுக்காது. அவர்களுக்கு கொடுக்கவே செய்யும். மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு செலவழித்த அதே தொகை மக்களுக்கு கொடுக்கப்படும் . நமது அரசு அதானிகளின் ஆட்சியாக இருக்காது, இந்தியர்களின் ஆட்சியாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!