டெல்லியில் குவியும் தலைவர்கள்.. ஆட்சி அமைக்கும் இந்தியா கூட்டணி?.. உத்தவ் தாக்கரே ஆருடம்..!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 292 இடங்களில் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் படிக்க: தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. அள்ளிக் குவித்த வாக்குகள்; அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..!

வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று காத்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்தன. இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடக்கும் நிலையில், அதற்கு முன்னதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சில பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி ஆன இந்தியா மத்தியில் ஆட்சியை அமைக்க உரிமை கூற வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, உத்தவ் தாக்கரே பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கூற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, நான் டெல்லி செல்ல உள்ளேன். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

இங்கே பல்வேறு கட்சிகளும் பாஜக கூட்டணி வைத்ததற்கு ஒரே காரணம் அக்காட்சிகளில் இருந்து பயம் தான். எனவே, அடுத்தடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சில நாட்களில் நிலைமை என்ன என்பது தெரியவரும். சந்திரபாபு நாயுடுவை கூட அவர்கள் கடந்த காலங்களில் எந்த அளவுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அது இந்தியா கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் முக்கியமானது. மகாராஷ்டிரா அங்கு மொத்தம் 48 லோக்சபா சீட்டுகள் இருக்கும் நிலையில், அதில் காங்கிரஸ் 13 இடங்கள், தாக்கரே சிவசேனா ஒன்பது இடங்கள், சரத் பவாரின் என்சிபி 10 இடங்கள், இந்தியா கூட்டணி மட்டும் 32 சீட்டுகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா, எதிர்கட்சி கூட்டணி 30 இடங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மொத்தம் உள்ள 543 சீட்டுகளில் பெரும்பான்மை பெற எந்த கட்சிக்கும் 272 சீட்டு தேவை ஆனால், இந்த முறை யாருக்கும் அந்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வென்ற நிலையில், பாஜக 240 சீட்டுகள், தெலுங்கு தேசம் 16 சீட்டுகள், ஜேடியு 12 சீட்டுகள், சிவசேனா ஏழு சீட்டுகளில் வென்றுள்ளனர். மறுப்புரம் இந்தியா கூட்டணி 234 சீட்டுகளில் வென்றது. காங்கிரஸ் அதிகபட்சமாக 99 இடங்களில் வென்ற நிலையில், சமாஜ்வாதி 37 சீட்டுகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 29 சீட்டுகளிலும், திமுக 22 சீட்டுகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

13 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

18 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

1 hour ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

2 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

This website uses cookies.