திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சிபிஆர் சிகிச்சை குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 1:24 pm

பொதுமக்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் சி பி ஆர் சிகிச்சை அளிப்பது பற்றி ஹைதராபாத்தில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சர்வ சாதாரணமாக மாறி வருகிறது. உணவுப் பழக்கம், மன அழுத்தம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்களில் வயது குறைந்தவர்களுக்கு கூட எவ்விதமான அறிகுறிகளும் இல்லாமல் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் உள்ளிட்ட பல்வேறு வகையான இன்னல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

பலர் தங்கள் பயணத்தின் போது திடீரென்று மாரடைப்பிற்கு உள்ளாகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் தேவையான அளவில் தற்போது இல்லை.

இதனால் மாரடைப்பு ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலேயே அனைவரும் கவனமும் இருந்து விடுகிறது.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சிபிஆர் உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும்போது காலதாமதம் ஏற்பட்டால் அவர்களுடைய உயிர் பிரிந்து விடுகிறது.

இந்த பிரச்சனைக்கு இயன்ற வரை தீர்வு காண ஹைதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள கோஸ்மஹால் காவல் நிலையத்தில் போலீசாருக்கு சிபிஆர் சிகிச்சை அளிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை ஹைதராபாத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கும் அளிக்க மாநகர காவல் துறை முடிவு செய்துள்ளது.

இதனால் பயணத்தின் போது நடுவழியில் மாரடைப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு முதலில் சிபிஆர் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.

  • Tamil actress Rambha comeback ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!
  • Views: - 483

    0

    0