சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை : முழு விபரம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 8:56 pm

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை : முழு விபரம்!

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது. முன்கூட்டியே சி.பி.எஸ்.இ வாரியம் அறிவித்தபடி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி நிறைவடைகிறது.

அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி நிறைவடைகிறது. ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, சுமார் 55 நாட்களுக்கு நடைபெறும்.

காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அட்டவணையை cbse.nic.in அல்லது cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஜனவரி 1 ஆம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதேசமயம், குளிர் மிகுந்த பகுதிகளில் பள்ளிகளுக்கான பிராக்டிக்கல் தேர்வுகள் நவம்பர் 14 ஆம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், CBSE தேர்வு அட்டவணை டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்பட்டன. பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 அன்று தொடங்கி, 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் மார்ச் 21 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 5 ஆம் தேதியும் முடிவடைந்தன.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 463

    0

    0