400 சீட் வென்றதும் ஞானவாபி உள்ள இடத்தில் ராமர் கோவிலை போல அடுத்த பிரம்மாண்டம் : பாஜக பிரமுகர் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 5:49 pm

400 சீட் வென்றதும் ஞானவாபி உள்ள இடத்தில் ராமர் கோவிலை போல அடுத்த பிரம்மாண்டம் : பாஜக பிரமுகர் சர்ச்சை!

டெல்லியில் லஷ்மி நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மல்ஹோத்ராவை ஆதரித்து பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் வைக்கப்படவில்லை.

​​ஒரு காஷ்மீர் இந்தியாவிலும் மற்றொன்று பாகிஸ்தானிலும் உள்ளது என்று எங்களிடம் கூறப்பட்டது. தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து வருகிறது, மக்கள் தங்கள் கைகளில் இந்திய மூவர்ணக் கொடியைப் பிடித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இனி அப்படி இருக்காது. பாஜக 400 இடங்களைப் பெற்றால் விரைவில் பிரதமர் மோடியின் தலைமையில் காஷ்மீர் நமது நாட்டின் ஒரு பகுதியாக மாறும் என்றார்.

மேலும் படிக்க: நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

மேலும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றி விடுவார்கள் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டை நிராகரித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, 400 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்தால் மதுரா மற்றும் வாரணாசியில் கோயில்களைக் கட்ட உதவும் என்றார். சச்சின் டெண்டுல்கரை ஏன் டபுள் செஞ்சுரி, ட்ரிபிள் செஞ்சுரி அடித்தார் என்று கேட்பீர்களா? 300 சீட்கள் இருந்தபோது ராமர் கோயில் கட்டினார் மோடி.

இப்போது 400 இடங்கள் கிடைத்தால் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி உருவாகும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை மாற்றுவோம். அங்கு பாபா விஸ்வநாதருக்கு ஒரு பெரிய கோவில். எழுப்புவோம். முகலாயர்களால் பரப்பப்பட்ட குழப்பத்தை நீக்குவோம் என்று கூறியுள்ளார்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 393

    0

    0