கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து பைரவா நாய் ஆருடம் கூறியதை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது.
கருத்துக்கணிப்பு படி ஆளும் பாஜகவுக்கு வெற்றி கிடைப்பதில் சந்தேகம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்நாடக தனியார் தொலைக்காட்சியும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக 79 முதல் 89 தொகுதிகளிலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 தொகுகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என ‘பைரவா’ என்ற நாய் ஆரூடம் கணித்துள்ளது. கால பைரவேஸ்வரரின் தீவிர பக்தரான மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவருக்கு சொந்தமான ‘பைரவா’ என்ற நாயின் முன்பு, முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரின் புகைப்படங்களை வைத்து, மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என ஆருடம் கேட்டார்.
அப்போது, குமாரசாமியின் புகைப்படத்தை வாயில் கவ்விய ‘பைரவா’ நாய், அடுத்த முதல்வரை கணித்தது. இந்த நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.