நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? ஆதிக்கம் செலுத்திய பாஜக முதலமைச்சர்கள்… ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 11:26 am

நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? ஆதிக்கம் செலுத்திய பாஜக முதலமைச்சர்கள்… ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா?

பிரபல ஆங்கில மீடியாவான இந்தியா டுடே இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் நாட்டில் பெஸ்ட் முதல்வர் யார் என்பது குறித்த லிஸ்டையும் வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முதலிடத்தில் உள்ளார். 46.3% பேர் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த ஆக. மாதம் நடந்த இதே சர்வேயில் யோகி ஆத்தியநாத்திற்கு 43% ஆதரவு இருந்த நிலையில், இப்போது அது 46%ஆக மேலும் அதிகரித்துள்ளது.

இரண்டாவது இடம் பிடித்துள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் 19.6 சதவீத ஆதரவுகளை மட்டுமே பெற்றுள்ளார். தொடர்ந்து மம்தா 8.4% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், 5.5% ஆதரவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், கர்நாகடக முதலமைச்சர் சித்தாரமையா, ஹிமந்த் பிஸ்வா, ஏக்நாத் ஷிண்டே, புஷ்கர் சிங் தாமி, பூபேந்திர சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?