பாஜக தேசிய தலைவர் யார்? உள்ளே வருகிறார் இளம் தலைவர் : அதிரடி முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2024, 10:51 am
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.
பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் ஆவதால் வேறு ஒருவர் பாஜக தலைவராக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆர்எஸ்எஸ் சார்பாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவரும் அமைச்சர் ஆகிவிட்டார்.
இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர் தலைவருக்கான லிஸ்ட்ல பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போக அனுராக் தாக்கூர் பாஜக தேசிய தலைவர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
புதிய அமைச்சர்கள் குழுவில் இருந்து அனுராக் தாக்கூர் விலக்கப்பட்டிருப்பது, கட்சி அமைப்புக் கட்டமைப்பில் அவருக்கு இடமளிக்கப்படுவதற்காகத்தான். அவர் தலைவர் ஆக சான்ஸ் உள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு இலாகாக்கள் அமைச்சராக இருந்தவருக்கு இந்த முறை பதவி கொடுக்கப்படாத நிலையில் அவர் கட்சி தலைவர் ஆவதாக செய்திகள் வருகின்றன.