யார் இந்த பெண்? கேரளாவில் நடந்த வினோத திருவிழா.. பிரம்மித்து போன நடிகை கஸ்தூரி!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 4:30 pm

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா தனித்துவமான திருவிழாவாகவும், உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வினோத நடைமுறையுடன் கூடிய திருவிழாவாகவும் உள்ளது.

கோயிலின் முதன்மை தெய்வம் வனதுர்கா என்றும் அழைக்கப்படும் துர்கா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஆண்கள் தங்கள் மீசை தாடியை மழித்துவிட்டு பெண்களைப் போல் பாரம்பரிய ஆடை மற்றும் வளையல் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் ஆண்டு விழா பாரம்பரிய சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது.

ஆயிரக்கணக்கான ஆண்கள் வேலை, செல்வம் ஆகியவற்றை வேண்டி பெண்களைப் போல அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

தாவணி, கசவு புடவைகள் மற்றும் சுடிதார்களை உடுத்தி, நகைகளையும் அணிந்து கோவில் வளாகத்தை சுற்றிவந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த சமயவிளக்கு திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆண்களில் பெண்களைப் போல் சிறப்பாக ஆடை அலங்காரம் செய்து வருபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. அப்படி இந்த முறை பரிசு வென்றவரின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இந்த திருவிழாவின் வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி, இந்த வீடியோவை பிரம்மித்து போனேன்.. அங்கே யார் மேக்கப் செய்தார்களோ, அவர்கள் என் ஊழியராக தேவை என பதிவிட்டுள்ளார்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?