தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகவாகும். இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக களப்பணியாற்றியது.
இதே போல கர்நாடகவில் தங்கள் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் அசூர வேகத்தில் தேர்தல் பணியாற்றியது. இந்தநிலையில் கர்நாடாகவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற இரண்டு கட்சியின் தலை விதியை நிர்ணயிக்கும் வாக்குபதிவானது இன்று தொடங்குகிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2 ,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் முதியோர்களுக்கு தபால் வாக்ககுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பணி நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் எந்த வித வன்முறையும் ஏற்பட கூடாது என்பதற்காக வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மொத்தமாக தேர்தல்பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 56 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இணையவழியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.