நீட் தேர்வை எதுக்கு ஒழிக்கணும்…? இனி தேர்வை இப்படி நடத்துங்க.. தேசிய தேர்வு முகமை போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2024, 2:58 pm

இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் சமூக அமைப்புகளும் வீதிக்கு வந்து போராட்டங்ககளை முன்னெடுத்தது அரசுக்கு பெரும் தலவிவழியாக மாறியது. இதனைத்தொடர்ந்து 1000 துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த ஜூன் 22 , தேர்வு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில்தான் அடுத்த வருடம் முதல் நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுவரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. எனவே தற்போது பொறியியல் நுழைவுத்தேர்வுகளான ஜேஇஇ தேர்வுகள் கணினி மூலம் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படுவதை போல நீட் தேர்வுகளையும் அடுத்த வருடம் முதல் நடந்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 383

    0

    0