ஏன் தாய் மொழியில் மருத்துவம், சட்டம், தொழில்நுட்ப படிப்புகள் கற்பிக்கப்படுவதில்லை? மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 11:33 am

முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி இம்மாநாடு நடந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நீதித்துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். டிஜிட்டல் இந்தியா பணியின் இன்றியமையாத பகுதியாக நீதித்துறையில் தொழில்நுட்பத்தை இந்திய அரசு கருதுகிறது. இ-கோர்ட்டுகள் திட்டம் இன்று மிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது.

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும்.
2015 ஆம் ஆண்டில், பொருத்தமற்றதாக மாறிய சுமார் 1,800 சட்டங்களை நாங்கள் கண்டறிந்தோம். இவற்றில் 1,450 சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், 75 சட்டங்களை மட்டுமே மாநிலங்கள் ரத்து செய்துள்ளன” என்று தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் ஏன் பயிற்றுவிக்கப்படுவதில்லை? மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது? மொழி என்பது நீதியை பெறுவதற்கான ஒரு வகையான தடையாக இருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 1122

    0

    0