ஆசிரியர்களும் ஹிஜாப் அணிந்து வர தடை… பணியை ராஜினாமா செய்த கல்லூரி பேராசிரியை.. கர்நாடகாவில் பரபரப்பு

Author: kavin kumar
18 February 2022, 8:03 pm

கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறியதால் கர்நாடகாவில் தனியார் கல்லூரி சிறப்பு பேராசிரியை தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தால் மத ரீதியாக மாணவர்கள் மனதில் விஷ விதைகள் தூவப்படுவதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள ஜெயின் பியூ கல்லூரி வாளகத்தில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வரும் சாந்தினி நஸ் என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்தக் கல்லூரியில், நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வந்துதான் பாடம் எடுத்து வந்தேன். தற்போது இதை அகற்றும்படி கூறுவதால், எனது விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம் சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியல் சாசனம் அனுமதிப்பதை, யாராலும் மறுக்க முடியாது. ஜனநாயகமற்ற உங்களின் செயலை கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!