கணவன்மார்களே உஷார்… மனைவிக்கு வலுக்கட்டாயமாக LIP KISS கொடுக்க முயற்சி.. நாக்கை இழந்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 2:38 pm

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலம் எல்லம் குட்டா தாண்டாவில் மனைவிக்கு விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற கணவன் நாக்கை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாராசந்த் நாயக், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தைச் சேர்ந்த புஷ்பாவதியை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது மத்தியில் அவ்வப்போது குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. புஷ்பாவதியை சமாதனம் செய்ய தாராசந்த் நாயக் லிப் டு லிப் கிஸ் கொடுக்க முயன்றார். இதனை தடுக்க மனைவி முயன்ற நிலையில் வலுக்கட்டாயமாக கிஸ் கொடுக்க முயன்றதால் தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக் சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜொன்னகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் இவ்வாறு செய்ததாக மனைவி புஷ்பாவதி ஜொன்னகிரி போலீசில் புகார் அளித்தார். கணவரிடம் போலீசார் இன்னும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!