‘அம்மா வீட்டுக்கு போகனும்’… அடம்பிடித்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் ; நேரில் சென்று விசாரித்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
3 May 2023, 6:27 pm

அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் நஜப்ஹர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவருக்கு நேஹா (40) என்ற மனைவியும், 13 வயதில் மகளும் உள்ளார். விக்கியின் மனைவி நேஹாவின் சொந்த ஊர் பீகாராகும்.

இதனிடையே, மாமனார் வீட்டுக்கு சென்று வருவதில் விக்கிக்கும், அவரது மனைவி நேஹாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விக்கிக்கும் அவரது மனைவி நேஹாவுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் பீகாரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என நேஹா கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த விக்கி தனது மனைவி நேஹாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நேஹாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயங்களுடன் இருந்த விக்கியையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 512

    0

    0