ஓடஓட விரட்டிய காட்டு யானை… விழுந்து எழுந்து ஓடிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
8 June 2023, 3:59 pm

கேரளாவில் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை காட்டு யானை ஓடஓட விரட்டிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் வயநாடு பந்திப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை பார்வையிட சென்றனர். அப்போது,தமிழகத்தை சாரந்த நபர் கேரளாவுக்கு சென்று கொண்டு இருக்கும் போது காரை நிறுத்தி விட்டு அந்த நபர் சட்ட விரோதமாக காட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இந்த நேரத்தில், காட்டு யானையை பார்த்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை திடீரென தாக்க முயன்று உள்ளது. அப்போது, ​​அந்த நபர் எழுந்து ஓடிவிட்டார். யானை தாக்கியதில் இருந்து சிறிது நேரத்தில் உயிர் தப்பினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1965

    0

    0