மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக? வெளியானது சர்வே முடிவுகள் : தென்னிந்தியாவில் எத்தனை இடங்கள்? முழு விபரம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 7:45 pm

மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக? வெளியானது சர்வே முடிவுகள் : தென்னிந்தியாவில் எத்தனை இடங்கள்? முழு விபரம்!

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகள் பெறக் கூடிய இடங்கள் எவ்வளவாக இருக்கும்? என கருத்து கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் டிவி நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

டைம்ஸ் நவ் டிவி நிறுவனம் அக்டோபர் மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில், தேசிய அளவில் பாஜகதான் ஆட்சி அமைக்கும்; ஆனால் ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் மிக அதிகபட்சமாக 25 இடங்கள்தான் கிடைக்கும்; அதுவும் கர்நாடகாவில்தான் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக ஜெயிக்க முடியும்; இதர தென்னிந்திய மாநிலங்களில் 1 அல்லது 2 இடம்தான் வெல்லும் அளவுக்கு பாஜக உள்ளது என தெரிவித்திருந்தது.

டைம்ஸ் நவ் டிவி நிறுவனம் நேற்று மீண்டும் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருந்தது. அதிலும் தென்னிந்தியாவின் 129 தொகுதிகளில் பாஜகவால் அதே அதிகபட்சம் 25 இடங்களில்தான் வெல்ல முடியும் என கணித்துள்ளது டைம்ஸ் நவ் சர்வே.

தென்னிந்திய மாநிலங்களில் எடுத்த சர்வே முடிவுகள்

கர்நாடகா மொத்தம் 28 இடங்கள்: பாஜக கூட்டணி 20-22 இடங்கள் காங்கிரஸ் 6 – 8 இடங்கள் தெலுங்கானா மொத்தம் 17 இடங்கள் காங்கிரஸ் 8 முதல் 10 இடங்கள் பாஜக 3 முதல் 5 இடங்கள் பிஆர்எஸ் 3 முதல் 5 இடங்கள்

தமிழ்நாடு மொத்தம் 39 இடங்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணி 30 முதல் 36 இடங்கள் அதிமுக 3 முதல் 6 இடங்கள் பாஜக 0 முதல் 1 இடம்

ஆந்திராவில் மொத்தம் 25 இடங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 24 முதல் 25 இடங்கள் தெலுங்குதேசம் கட்சி 0 முதல் 1 இடம் கேரளாவில் மொத்தம் 20 இடங்கள் காங்கிரஸ் 11 முதல் 13 இடங்கள் சிபிஎம் 3 முதல் 5 இடங்கள் முஸ்லிம் லீக் 1 முதல் 2 இடங்கள் பாஜக 0 முதல் 1 இடம் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 465

    0

    0