மீண்டும் மீண்டுமா? வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு…இந்த முறை சென்னை அல்ல!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 10:43 am

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று காலை 9:35 மணிக்கு மர்ம நபர்கள் அனுப்பிய மின்னஞ்சல் வந்தது. அதில் டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி-துபாய் விமானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையல் தற்போது டெல்லி விமான நிலையத்திற்க வந்துள்ள மிரட்டல் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!