பாஜகவுக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதற்கு 4 மாநில தேர்தல் முடிவுகளே சாட்சி : ஆந்திர பாஜக கருத்து!!
Author: Udayachandran RadhaKrishnan10 March 2022, 6:21 pm
ஆந்திரா : நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை தொடர்ந்து விஜயவாடாவில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சோமுவீரராஜூ தலைமையில் அக்கட்சியினர் தேர்தல் வெற்றியை இன்று கொண்டாடினர்.
அப்போது பேசிய சோமவீரராஜு நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் உண்மையை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கு தேர்தல் முடிவு சான்றாக அமைந்துள்ளது என்று அப்போது குறிப்பிட்டார்.