லிப்ட் கேட்டு காரில் ஏறி ஆடைகளி கிழித்து நாடகம்… வலையில் சிக்கும் அப்பாவி ஓட்டுநர்கள்… தில்லாலங்கடி லேடிக்கு ஆப்பு வைத்த போலீஸ்!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 9:21 pm

ஆந்திரா அருகே லிப்ட் கேட்பதைப் போல நடித்து பலாத்கார நாடகமாடி, பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத் அருகே இருக்கும் சாஸ்திரிபுரத்தைச் சேர்ந்த 30 வயதான சுமையா சுல்தானா என்பவர், தனியாக காரில் வரும் ஆண்களை குறிவைத்து லிப்ட் கேட்டு ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். காரில் ஏறியவுடன் பேச்சில் அவர்களை மயக்குவது போல பேசி வலையில் வீழ்த்துவார்.

பின்னர், சிறிது தூரம் அவர்களுடன் காரில் பயணிக்கும் சுமையா, திடீரென தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிப்பேன் என ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்து போன ஓட்டுநர்கள், புகார் ஏதும் அளிக்காமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு, தப்பிச்சோம் டா சாமி என்று கிளம்பி விடுவார்கள்.

இது சுமையா சுல்தானாவுக்கு சாதகமாக மாறிப் போனது. இந்தநிலையில், வழக்கம் போல ஒரு கார் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு பயணிக்கும் போது, தன்னுடைய பாணியில் சேலையைக் கிழித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஓட்டுநர் பணம் தர மறுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், பல ஓட்டுநர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி போலீசாரிடம் சிக்க வைத்ததும், பலரிடம் பணம் பறித்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 475

    0

    0