‘மகனை வளர்த்த விதம் சரியில்ல’… கடுப்பில் ஆண் வேடமிட்டு மாமியாரின் காலை உடைத்த மருமகள் ; பகீர் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 7:30 pm

கேரளா ;திருவனந்தபுரத்தில் ஆண்வேடம் அணிந்து வந்து மாமியாரின் கால்களை மருமகள் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாசந்தி. கடந்த 9ம் தேதி பால் வாங்குவதற்காக சென்ற போது, அந்த வழியாக வந்த ஆண் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் காலிலும், தலையிலும் தாறுமாறாக தாக்கியுள்ளார். இதில், அவரது கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தாக்கிய நபர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, கால் முறிந்த வாசந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் வேடமிட்ட பெண் ஒருவர், தாக்குதல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வீட்டில் இருந்தவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில், தனது கணவனின் சட்டை மற்றும் பேண்டடை அணிந்து கொண்டு, முகமூடியை அணிந்து சென்று வாசந்தியை அவரது மருமகள் சுகன்யா தாக்கிய தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் ரெதீஷ்குமார் குடிக்கு அடிமையாகியதாகவும், தினமும் வீட்டிற்கு வந்து தன்னை தாக்கியதாகவும் கூறினார். தனது கணவனின் இதுபோன்ற செயல்களுக்கு அவரது அம்மாவும், தனது மாமியாருமான வாசந்தி ஆதரவு கொடுத்ததாகவும், எனவே, மாறுவேடத்தில் சென்று தாக்கியதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த வாக்குமூலம் போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளது.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!