பெண்ணிடம் செயின் பறிப்பின் போது கையில் இருந்த 5 மாத குழந்தை தவறி விழுந்து பலி : அதிர்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2022, 12:03 pm
ஆந்திரா : கொள்ளையன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது 5 மாத ஆண் குழந்தையை மாடிப் படிக்கட்டுகளில் இருந்து தவறவிட்ட தாயால் குழந்தை பலியானது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் வசிப்பவர் பாரதி. இன்று காலை வீட்டில் மாடியில் இருந்து பாரதி தன்னுடைய 5 மாத ஆண் குழந்தையுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அங்கு வந்த கொள்ளையன் ஒருவன் பாரதியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். சங்கிலியை கொள்ளையரிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட பாரதி அதிர்ச்சியில் குழந்தையை தவற விட்டார்.
சுமார் 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெறுகிறது. தங்க சங்கிலியை பறிக்கும் போது குழந்தையை தவற விட்டு இறந்த சம்பவம் காரணமாக கடப்பாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.