வீட்டிலேயே நடந்த பிரசவம்.. குழந்தையை பக்கெட்டில் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாய் : அதிர்ந்து போன மருத்துவமனை!!

Author: Babu Lakshmanan
4 April 2023, 10:04 pm

கேரளாவில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு, அதனை பக்கெட்டில் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலப்புழா மாவட்டத்தில் செங்கன்னூர் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே, வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து, பிறந்த குழந்தையை வீட்டின் கழிவறையில் உள்ள வாளி ஒன்றில் வைத்து விட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு நடந்ததை மருத்துவர்களிடம் அவர் கூறியுள்ளார். இதன்பின் மருத்துவமனையில் இருந்த அதிகாரிகளிடம் அவர் நடந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், பக்கெட்டில் பார்த்துள்ளனர். அப்போது, குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து, பக்கெட்டுடன் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பக்கெட்டில் விட்டு விட்டு, சிகிச்சைக்காக அதன் தாய் மருத்துவமனைக்கு சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 482

    0

    0