பிறந்த நாளுக்கு ஒரு GIFT இல்ல… துபாய் TRIP இல்ல… கோபத்தில் மனைவி செய்த செயல் ; ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த கணவன்…!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 6:32 pm

பிறந்த நாளுக்கு துபாய் அழைத்துச் செல்லாத கோபத்தில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வனவ்டி என்ற பகுதியைச் சேர்ந்த நிகில் கண்ணா (36). ரியல் எஸ்டட் தொழில் மற்றும் பள்ளி ஒன்றையும் நடத்தி வரும் இவர், 6 ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், கணவன், மனைவி இடையே பிறந்த நாளை கொண்டாடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. துபாய்க்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ரேணுகா விரும்பியுள்ளார். ஆனால், அதற்கு சம்மதிக்காத நிகில், சண்டையில் பிறந்த நாளுக்கு பரிசு கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தில் ரேணுகா, தனது கணவர் நிகிலின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில், பற்கள் உடைந்தும், மூக்கு உடைந்தும் ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், பதறிப்போன அவர், தனது மாமனார் உதவியுடன், நிகிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசார் ரேணுகாவை கைது செய்தனர். மேலும், குடிபோதையில் ஏதாவது ஆயுதத்தை வைத்து கணவனை தாக்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…