மேடையில் குத்துச்சண்டை போட்ட பெண் அமைச்சர் : அரசு நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான போட்டி.. (வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 2:37 pm

முதல்வரின் தேசிய குத்து சண்டை போட்டியை விசாகப்பட்டினத்தில் துவக்கி வைத்த பின் அமைச்சர் ரோஜா குத்து சண்டை போட்டார்.

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பவர் முன்னாள் நடிகை ரோஜா. பேச்சு, செயல்கள் ஆகிவற்றின் மூலம் பரபரப்பு கிளப்பும் ரோஜா கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்பு உடைய வகையில் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன்னர் நகரியில் கபடி போட்டியை துவக்கி வைத்த போது கபடி ஆடி அசத்தினார் ரோஜா. அதன்பின் திருப்பதி உட்பட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நடனமாடினார்.

இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் முதல்வரின் தேசிய குத்துச்சண்டை போட்டியை துவக்கி வைத்த ரோஜா குத்து சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 501

    0

    0