மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைத்து கொடூரக் கொலை ; கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் ‘ஷாக்’ சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 7:40 pm

பீகார் அருகே கணவனை இழந்த பெண்ணின் மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி (45) என்பவர் கணவரை இழந்து தனியே வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கிராமத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தேவியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தேவியின் கணவர் பப்லு சிங்கும், அவரது சகோதரரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நிலத்தகராறு காரணமாக 2 பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த குற்றவாளி கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அந்த குற்றவாளியே தேவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த குற்றவாளி எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனை இழந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரி தேவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 490

    0

    0