கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற பெண்… அசுர வேகத்தில் வந்த பைக் மோதி தூக்கிவீசப்பட்ட அதிர்ச்சி காட்சி!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 12:39 pm

கேரளா : அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம், கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதியதில் குழந்தை தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கல்லற என்ற பகுதியில் நேற்று மாலை கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற இளம் பெண்ணை, அதி வேகத்தில் வந்த பைக் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தின் போது பெண்ணின் கையில் இருந்த குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளது.

அதிவேகத்தில் வந்த பைக் மோதியதில் இளம் பெண்ணின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், அவரின் கையில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட குழந்தை சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.

இது குறித்து திருவனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 527

    0

    0