சபரிமலையில் பெண்கள்… உத்தரவு வாபஸ் : கம்யூனிஸ்ட் அரசின் திடீர் அறிவிப்பு… பக்தர்கள் வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 8:11 pm

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நடப்பாண்டு கொரோனா கால கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

இதனால் கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான பக்தர்கள் வருகை 2 மடங்கு அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் சபரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தொடங்கி உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

மேலும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழிகாட்டுதல் கையேடு- ஹேண்ட்புக் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.

அதில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது திடீரென சர்ச்சையானது.


இதனால் உடனடியாக இந்த உத்தரவை வாபஸ் பெறும் வகையில் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல் புத்தகம் திரும்பப் பெறப்பட்டது.

2018-ம் ஆண்டு கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தபோதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க கூடாது என வலதுசாரிகள் தீவிரப் போராட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கேரளா அரசு தீவிரம் காட்டியது. இதனால் கேரளாவை உலுக்கும் வகையில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 416

    0

    0